துணை
தொப்புள்கொடி சொந்தமும்
துணையற்றுப் போனது ..
துணை என்ற பந்தமும்
துயர் கூட்டுவதில் துணை என்றானது ..
வரதட்சணை என்ற பெயரில்
வாழ்க்கைத்துணை வாங்கியதால் ..
வாழ்வும் வாழப்படுகிறது
உயிர் கொண்ட பெண்மையின்
உணர்வுகளை அழித்து! வெறும்
உணவின் வாழ்வாய் மட்டும் ...