ஹ ஹ ஹ ஹ ஹ ஹ
ஒரு பேருந்து நிலையத்தில் ஓர் பெண்
தன்னுடையபையனுடன் பதற்றமாக
நின்று கொண்டிருந்தாள்.
பக்கத்தில் உள்ளவர்கள்
என்னவென்று கேட்டனர்.
"இவன் காசை முழுங்கிட்டான்.
என்ன
செய்றதுன்னுதெரியலை''
ஆளாளுக்கு மருத்துவம் சொல்ல ஆரம்பித்தார்கள்.
""நாலுவாழைப் பழத்தை ஊட்டிவிடு.
தானா வெளியே வந்துடும்''
"ஆஸ்பத்திரிக்குப் போய் எக்ஸ்ரே எடுத்துப் பார்... ''
கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ஒருவர்
பையனைத்தூக்கிக்குனிய வைத்து
முதுகில் தட்டிக் கொடுத்தார்.
பையன் விழுங்கிய
காசுவெளியே வரவில்லை.
அப்போது டிப்டாப்பாக உடையணிந்த ஒருவர்
வந்தார்
பையனைத்தூக்கி, தலைகீழாகப் பிடித்துக்
குலுக்கி, ஒருதட்டுத் தட்டினார்.
காசு வெளியே வந்து விழுந்தது.
எல்லாரும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
அந்தப்
பெண்நன்றியுடன் அவரைப் பார்த்தாள்.
"சார் நீங்க டாக்டருங்களா?''
"இல்லை இன்கம்டாக்ஸ் ஆபிஸர். எங்கே,
எப்படித்தட்டினால் காசு விழும்னு எனக்குத்
தெரியாதா? ''