வண்டி

அவர மாதிரி வண்டி ஓட்ட ஆளே இல்ல.
பேர் கூட என்னன்னு தெரியாது. 40-45 வயசு இருக்கும். கடா மீசை, ஒருசில வெள்ளை முடிகளுடன் 15 நாள் மழிக்காத தாடி, காக்கி டிரௌசர் வெளிய தெரியற மாதிரி லுங்கி,
இதுதான் அவருடைய அடையாளம். அவரோட வண்டி வந்தா வெடிக்க பாக்காத ஆளே இருக்காது. அவ்வளவு வேகம்.
சின்ன வயசுல எப்படியாவது அவரு வண்டிய ஒருதடவையாவது ஓட்டனும்ன்னு ஆசை.
சும்மா சாட்டாய எடுத்து ஒரு சொலட்டு சொலட்டின வண்டி ராக்கெட் வேகத்துல பறக்கும். அவரு மாட்ட பாத்தாலே எல்லாரும் பயப்படுவாங்க அப்படி ஒரு கம்பீரம்.
8.30 மணிக்கு அவரு வண்டி வருதான்னு பாத்துட்டு தான் ஸ்கூலுக்கு போவோம். வண்டி வந்துடுச்சி ஒரே குசி தான். ஓடி பொய் மணியம் சீல்க்ஸ் மஞ்சபைல கொண்டு போற புஸ்தகத்தை அவர் வண்டில போட்டுட்டு பின்னாடியே ஓடுவோம் ஸ்கூல் வரைக்கும்.
எப்போவாவது வண்டி காலியா போன சின்ன பசங்கள மட்டும் மேல உக்கார சொல்லுவாரு.
இரண்டொருமுறை அந்த வாய்ப்பும் கிடைத்தது.
ஸ்கூல் ல பொய் அதை பெருமையாய் சொன்னதுமுண்டு.

ரொம்ப வருஷம் கழிச்சி இன்னைக்கு அவர பார்த்தேன். ரொம்ப வயசாயி நடக்க முடியாம, என் வண்டி முன்னாடி கை காட்டினாரு, வண்டியை நிறுத்தினேன். மெதுவா கஷ்டப்பட்டு வண்டிக்கு பக்கத்துல வந்தார். தம்பி மெயின் ரோட்டுல விடுப்பான்னு சொன்னார்.
கொஞ்ச தூரம் போனதும் " தம்பி அப்படியே என்ன கரண்டு ஆபீஸ் வரைக்கும் வுட்டுடிரியான்னு கஷ்டமா கேட்டார். அதுக்கு என்னன்னா உங்க வண்டியில எத்தன வாட்டி வந்துருப்பேன்னு சிரிச்சிகிட்டே கொண்டு பொய் விட்டுட்டு வண்டியை திருப்பினேன்.
அப்ப்ப்ப்ப்ப்ப்பா என்ன ஒரு சந்தோசம் அம்பானிக்கே அம்பது ரூவா கடன் கொடுத்த மாதிரி.

விருப்பமுடன்
விக்ரம்.

எழுதியவர் : விக்ரம் (14-Aug-13, 6:40 pm)
சேர்த்தது : rvikrammba
Tanglish : vandi
பார்வை : 119

மேலே