காதல் வர என்ன வேண்டும் ...!
காற்று நுழைய ஜன்னல் வேண்டும்
காதல் நுழைய கண்கள் வேண்டும்
பெண்களை புரிந்து கொள்ள மணி பர்சில்
நிறைய பணம் வேண்டும் ...................!
பொய்யை நிறைய சொல்ல வேண்டும்
ஆனால் நல்லவர் போல் நாமும் நடிக்க வேண்டும்
தினம் ஒரு பூவை கொடுக்க வேண்டும்
பிற பெண்களை அவள் எதிரே வெறுக்க வேண்டும்
தப்பும் தவறுமாய் கவிதை எழுத வேண்டும்
கண்டபடி அவளை வர்ணிக்க வேண்டும்
மானே ...! தேனே ....என்று நடு நடுவே
போட வேண்டும் ....! அவள் சிரித்தால் நீயும்
சிரிக்க வேண்டும் .அப்பப்போ டாப்பப்
பண்ண வேண்டும் ...! பிறந்த நாளுக்கு
வீட்டில் பொய் சொல்லி பணம் வாங்கி
தட புடலாய் செலவு செய்ய வேண்டும்
இருக்கும் நேரத்தில் இல்லாததை நினைத்து
கனவு கண்டு பின் ஒரு நாள் அவளுக்காய்
வாழ்வை வெறுத்து தாடி வைக்க வேண்டும்
அந்த தாடியை காட்டியே இன்னொரு பெண்ணை
மறுபடியும் காதலிக்க வேண்டும் ......! எனவே .....!
காற்று வர ஜன்னல் வேண்டும் ...!
காதல் வர கண்கள் வேண்டும் !

