விடிவு வேண்டும்

15;08;2013 ஆங்கிலத்தில் 30;04;???? யாருக்கு தெரியும்?

விடுமுறை நாளாம் இன்று இவர்களுக்கு
விடுதலை பெற்றது காரணமாம் இந்தியாவுக்கு
விடுபட்டது அந்நியரிடமிருந்து அதனால் விடுதலைதினமோ
விடிந்தது 15ஆம்நாள் இதனால் விடுதலைதினமோ

விளங்கவில்லை இவனுக்கு விளக்குகிறேன் உமக்கு

இன்று மேடைமேல் ஆடியசிறுவனின்
.....திறம் மேடையிலேயே புதைக்கப்பட்டது
நின்று நடுக்கமின்றிபபாடிய சிருகுயிலின்
......குரல் சின்னதென சிதைக்கப்பட்டது

எவரும் எண்ணவில்லை இத்திறம்
.......ஏற்றிய கொடிபோல் பறக்கட்டுமென
இவனால் எண்ணமுடியவும் இல்லை
......ஒருபுறம் இது இருக்கட்டுமென..

விடிவில்லை இன்னும் சாலையோரத்தில் இரப்பவர்க்கு
விடிவில்லை இன்னும் சாலைவிபத்தால் இறப்பவர்க்கு

விடிவில்லை இன்னும் அதிகாரிகளின் ஊழலிடம்
விடிவில்லை இன்னும் அரசியலின் சூழலிடம்

விடிவில்லை இன்னும் பொருளாதார வீழ்ச்சிக்கு
விடிவில்லை இன்னும் பொதுவில்லாயேற்ற தாழ்ச்சிக்கு

விடிவில்லை இன்னும் சாதிமத சண்டைக்கு
விடிவில்லை இன்னும் காஷ்மீரெனும் மண்டைக்கு

விடிவில்லை இன்னும் பள்ளிச்சிறுமி கற்புக்கு
விடிவில்லை இன்னும் விற்பனையாகும் கற்புக்கு

விடிவொன்று வேண்டும் இருளுக்கல்ல இந்தியாவுக்கு

விடியவில்லயென வருந்திக்கொள்ளவோ
....விடியவேண்டுமென வாழ்த்துசொல்லவோ

....................................................................சரவணா

எழுதியவர் : சரவணா (15-Aug-13, 12:37 am)
Tanglish : vidivu vENtum
பார்வை : 161

மேலே