மதம்

புலர்ந்த பொழுதும் போவதுண்டு
வாழ்ந்த பிறையும் மறைவதுண்டு
ஓடும் அலைக்கும் ஓரிடமுண்டு
உறங்கும் விழிக்கும் உதயமுண்டு

பிறந்தது எல்லாம் மறைந்ததென்று
நிறைந்த மனங்கள் மருண்டதுண்டு- இது
பிறந்ததொன்று மறைந்திடாதோ என்று
ஏகமனங்கள் வருந்துவதொன்று!

எழுதியவர் : tamilventhan (15-Aug-13, 3:21 am)
சேர்த்தது : tamilventhan
பார்வை : 140

மேலே