என் கிறுக்கி - 7

இருவருக்குள்ளும் உள்ள காதல் இன்னும் வெளிப்படாமலே.. ஒருவருக்கொருவர் இன்னும் பரிமாறிக்கொள்ளவே இல்லை தங்கள் காதலை.. கிறுக்கன் சொல்வான் என்று கிறுக்கியும் , கிறுக்கி சொல்வாள் என்று கிறுக்கனும் காத்திருந்தனர் தங்கள் மனதில் காதலை பூட்டிவைத்துக்கொண்டு..ஆனால் அவர்களது உரையாடல் மட்டும் வளர்ந்துகொண்டே இருந்தது நாள்தவறாமல்...
கிறுக்கன் என்றாவது ஒருநாள் கிறுக்கியை தனியே சந்தித்து விடவேண்டுமென்று முடிவெடுத்துக்கொண்டான்.. "எங்கே சந்திப்பது என்று சிந்திப்பதிலேயே" இரண்டு நாட்கள் பிடித்துக்கொண்டது கிறுக்கனுக்கு... ஒருவழியாக ஊருக்கு ஒதுக்குபுறம் இருக்கும் கருப்பசாமி கோவில்லுக்கு வருமாறு கிறுக்கியிடம் திக்கி திணறி சொல்லிவிட்டான் .. ஏன் ஏன் என்று கிறுக்கி கேட்டதற்கு.. வா சொல்றேன் என்பது போல தொடர்புள்ளி வைத்தான் .. முற்றுப்புள்ளி வைத்து முடிக்காமல்... கிறுக்கி யோசித்து சொல்வதாக சொல்லிவிட்டாள்..பெண்களுக்கே உண்டான குணம் அல்லவா அது... கிறுக்கன் எதிர்பார்த்த ஒன்று தான் ... மறுநாள் காலை கிறுக்கி ... கிருக்கனிடம்... டேய்... டேய்... *********** என்று கிறுக்கனை பெயர் சொல்லி அழைத்து .. நாளைக்கு கருப்பசாமி கோயில் வேண்டாம் இந்த பஜார் பிள்ளையார் கோயில் வந்துடுடா.. அதுதான் பக்கம் என்று சொல்லி சென்றாள்..
தேர்வில் வெற்றிபெற்ற களிப்பில் கிறுக்கனின் 32 பற்களும் பளிச்சென்று தெரிந்தன... அது ஓகே ஓகே என்று கிறுக்கியிடம் சிக்னல் கொடுத்தன... பள்ளி முடிந்து மாலை 5 மணிக்கு சந்திப்பதென்று ஒப்பந்தம் போட்டனர்...
மறுநாள்...
பலமணிநேர ஒத்திகை ... பல அடுக்கு அலங்காரம் என கிறுக்கன் கிளம்பி வர.. உனக்கு சளைத்தவள் நானில்லை என்பது போல் கிறுக்கியும் கிளம்பி வர... இருவரும் மாறி மாறி தங்களது கைகடிகாரங்களை பார்த்த வண்ணம் , மணி 5 ஐ எதிர்ப்பார்த்து....
ஒருவழியாக கிறுக்கி முன்னே செல்ல , கிறுக்கன் பின்னே செல்ல .. இருவரும் 5.20க்கு கோவிலை அடைந்தனர்...
கிறுக்கன் விநாயகரை வேண்டியவாறு கண்களை பொத்திக்கொண்டு நிற்க அதன் நேரெதிரே கிறுக்கியும்..
சிறிது நேரத்தில் ஏய் .. ஏய் புள்ள ******* என கிறுக்கியின் பெயரை அழைத்து கிறுக்கன் தனது புத்தகப் பையிலிருந்து ஒரு பேப்பரை எடுத்து வியர்த்து விறுவிறுத்த முகத்துடன் , நடுங்கிய கைகளுடனும் கிறுக்கியின் கையில் கொடுத்து "ஐ லவ் யூ" என்று சொல்ல அதை முடிக்கும் முன் அதே வார்த்தை எதிரொலியாக கிறுக்கியிடமிருந்தும்..
இதையெல்லாம் பார்த்தபடி பிள்ளையார் ..
இன்னும் கிறுக்காக்குவாள்...