லஞ்சம்

துறையனைத்தும் தொலைந்து போனது
லஞ்சம் விரித்த வஞ்சத்தில்- பின்
நாடு நலம் பெறும் பாடு எப்படி?

திறமைக்கு ஏற்ப திருடர்கள் !
வாய்ப்புக்கு தகுந்த வழிப்பறி
வறுமையில் பிறந்த திறமை!
தேர்வில் மறைந்த கொடுமை!

நேர்மைக்கும் நெறிகட்டி
நெடுந்துன்பம் தாலாட்டும் நேரத்தில்
நிறைவாக நான் வந்தும் நிழலாகி போனேன்!
படுக்கும் நேரமின்றி படித்தேனே
எடுக்கும் அடியெல்லாம்
கொடுக்க தான் வேண்டுமா?

எழுதியவர் : tamilventhan (15-Aug-13, 1:29 am)
பார்வை : 160

மேலே