சுதந்திர நாடு வெட்க கேடு

அன்னியனை வெளியேற்றிய
அன்றைய தினம் மட்டுமே
சுதந்திர தினம்

ஆனால் இன்று

இந்திய நிறுவனத்தில் பல
அன்னிய நிறுவனம்

சில்லறை வணிகத்தில்
அன்னிய முதலீடு

பொருளாதரத்தை தீர்மானிக்க
அன்னிய செலாவணி

உலக வங்கியில்
இந்திய கடன்
ஆயிரம் கோடிக்கு மேல்

அன்னிய வங்கியில் இந்தியர்களின்
கறுப்பு பணம்
இரண்டாயிரம் கோடிக்கு மேல்
பாதுகாப்பு கருவிகள் வாங்க
அன்னிய நாடு
தலைவர்களின் நோய் தீர
அன்னிய நாட்டு மறுத்துவமனை

இந்த நிலையில்
சுதந்திர இந்தியா

என்று
யாரும் சொல்லி விடாதீர்கள்

அன்னியன் கூட விழுந்து விழுந்து சிரிப்பான்

எழுதியவர் : சஷி (15-Aug-13, 12:08 pm)
பார்வை : 120

மேலே