திசையறியா பயணம்

புரிதலில் விருப்பம் இல்லை
தேடலில் நாட்டம் இல்லை
கற்க ஆர்வம் இல்லை
விதண்டாவாதத்தில் விருப்பம்!

தெரியாததை தெரிந்தது போல் பாசாங்கு
தெரிந்து கொள்ள வாய்ப்பிருந்தும்.....மனமில்லை
எந்த அருகதையும் இல்லையென்றபோதும்
அறிந்தவர்களை விமர்சித்தல்

யாரிடம் பணிவு...எதற்கு துணிவு...
பிரித்தறிய தெரியாத போதும்....பகுத்தறிவு பாசாங்கு!
யாரும் எதையும் பேசலாம் செய்யலாம்
வரைமுறை இல்லை!

திசையறியா பயணம்!
கட்டுண்ட வாழ்வில்...கட்டுபடா புலன்கள்!
இரத்தினம் விற்று கூலாங்கல் சேகரிப்பு!
நண்பர்களே! வாருங்கள்!திரும்பி பார்ப்போம்
இலக்கு சரியானது தானா

எழுதியவர் : Namavatara Krishna Das (17-Aug-13, 12:38 am)
பார்வை : 86

மேலே