உண்மையில் யார் கடவுள்...?
கற்சிலைக்கு பாலூட்டி
நீர்
கண்டதென்ன..?
கரைந்து போகும் மனிதற்கு
நீர்
உணவளிக்க மறுத்ததென்ன..?
மனிதன் தான் கடவுளென்று
நீர்
மறந்ததென்ன..?
கல்லாகி போனதெல்லாம் கடவுளல்ல..,
அது
நாம் தான் என்று
நீர்
மறுப்பதென்ன..?
சன்னதியில் வேண்டியதை
சட்டென்று தருவாரா கடவுள்...?
வாசலில் பிச்சை கேட்டவுடன்
மறுகணம் கொடுக்கும்
மனிதன் அல்லவா கடவுள்...?
யோசிக்க மறந்தீரோ
உண்மையில் கடவுள் யாரென்று..?
!!!...விநோத் கண்ணா...!!!