கழிவு நீர் வண்டியால் வந்த வினை .

இரவு சுமார் 9.15 மணி இருக்கும்., மனைவியிடம் இருந்து ஒரு அழைப்பு., என்ன என்று கேட்டேன். பசங்க ரெண்டு பெரும் எங்க அம்மா வீட்டிலேயே சாப்பிட்டு விட்டார்கள், அதனால நம்ம ரெண்டு பேருக்கும் டிபன் ஏதாவது வாங்கி வந்து விடுங்கள் என்று சொன்னார். சரி என்று சொல்லிவிட்டு வாடிக்கையாக டிபன் வாங்கும் கடைக்கு எனது ஸ்கூட்டரில் சென்றேன். கடைக்கு சென்று வண்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்று எனக்கு வேண்டியதை ஆர்டர் செய்து விட்டு வெளியில் நின்றால் ஒரே மல நாற்றம் அடித்தது. நான் தான் தவறுதலாக எதையாவது மிதித்து விட்டோமா என்று எண்ணி பார்த்ததில் ஒன்றும் இல்லை. அப்பொழுது திடீர் என்று பைக்கில் சென்ற ஒரு இளைஞன் தானாகவே கீழே விழும் சப்தம் கேட்டு திடுக்கிட்டு திரும்பி பார்கிறேன். வழுக்கிக்கொண்டு கீழே விழுந்துகிடக்கிறான். அருகில் இருந்தவர்கள் உடனே சென்று அவனை தூக்கி நிறுத்திவிட்டு அடி ஏதாவது பட்டுவிட்டதா என்று பார்கிறார்கள். விழுந்தவன் எழுந்து ஏன் விழுந்தோம் என்றே தெரியாமல் முழிக்கிறான். இப்பொழுது எனக்கு அருகில் நின்று இருந்த கடைகாரர் அண்ணே சாயங்காலம்தான் கழிவுநீர் வண்டிக்காரர்கள் வந்து இந்த இடத்தில் அடைப்பு இருந்ததை கிளீன் செய்தார்கள். பின்பு அந்த கசடுகளை அள்ளி போட்டுவிட்டு அவர்களின் லாரி டயர் மூலமாக அந்த கசடுகளை தேய்த்துவிட்டு சென்றுவிட்டார்கள்., ஹோட்டல் முழுவதும் நாற்றம் அடிக்கிறது, மேலும் இதுவரை விழுந்தவருடன் சேர்த்து 8 பேர் வண்டியில் வழுக்கி விழுந்துவிட்டார்கள் என்று சொன்னான். எனக்கு ஒரே கோபம் வந்து விட்டது. கழிவு நீர் ஊர்தி காரர்கள் தான் அப்படி அறிவு இல்லாமல் செய்துவிட்டு போனார்கள் என்றாலும் நீங்கள் ஏன் சும்மா இருந்தீர்கள். முதலாமவன் அதில் வழுக்கி விழும் போதே நீங்கள் ஏதாவது செய்து இருக்க வேண்டாமா என்று கேட்டுவிட்டு அருகில் இருந்த பஞ்ச்சர் கடையில் இருந்த பழைய டயர் இரண்டு எடுத்து வந்து அதன் அருகில் போட்டு விட்டு சிறிது நேரம் நின்று பார்த்துகொண்டு இருந்தேன். அதன் பிறகு அந்த வழியாக வந்தவர்கள் எல்லாம் ரோடின் நடுவே டயர் இருப்பதை பார்த்து மெதுவாக சென்றார்கள். மனதிற்கு ஒரு தெம்பு வந்தது இனிமேல் யாரும் கிழே விழமாட்டார்கள் என்று . இதில் கொடுமை என்னவென்றால் அதன் எதிரில் ஒரு போலீஸ் செக் போஸ்ட் இருந்தும் அதில் ஒரு காவலர் இருந்தும் கிழே விழுந்ததை பார்த்துகொண்டு சும்மா இருந்ததுதான். இவ்வளவையும் செய்துமுடித்துவிட்டு அருகில் இருந்த காய்கறி கடைக்கார பையனிடம் கேட்டேன் ஏண்டா விழுந்த ஒரு ஒருவனையும் எண்ணிக்கொண்டு இருந்து என்கிட்டே இதுவரை 8 பேர் கணக்காயிடுச்சு என்று சொல்லுகிறாயே ஏன் உனக்கு இந்த டயரை எடுத்து அங்க போடணும் என்று தெரியாதா என்று கேட்டேன். உடனே அவன் சொன்ன பதில் அந்த போலீஸ் காரர் பார்த்துக்கொண்டே இருந்தார் அண்ணே நான் அத எடுத்து போட்ட பிறகு அவர் வந்து யாரை கேட்டு இந்த வேலைய செஞ்ச என்று என்னை போயி அடிச்சார் என்றால் என்ன அண்ணே செய்வேன் என்றான். உடனே நான் இதில் நீ விழுந்து இருந்தாலோ அல்லது உனக்கு தெரிந்தவர்கள் விழுந்து இருந்தாலோ உனக்கு அப்பா அதன் வலி புரிந்து இருக்கும் என்று கூறிவிட்டு வருத்தத்துடன் வீட்டிற்கு வந்தடைந்தேன். கண்டிப்பாக இது பற்றி எனது ஏரியா கவுன்சிலரிடம் புகார் கூறவேண்டும். இந்த கழிவு நீர் வண்டி ஊழியர்கள் இனிமேலாவது இந்தமாதிரி வேலையே செய்ய கூடாதென்று.

எழுதியவர் : (18-Aug-13, 1:24 am)
பார்வை : 111

மேலே