சுய விலாசம் தேடி....

நான் யார்?
உடலா? ஆன்மாவா?
வாழ்வின் நோக்கம் என்ன...
இக்கேள்விகள் கேட்கப்படும்போதெல்லாம்
தவறான பதில்களே பரிசளிக்க படுகிறது!
கல்வி சாலைகள் கற்பிப்பதென்ன
உடல் வளர்க்கும் உபாயம் தானே?
விலங்கினங்கள் சுயமாய் அறிவதை
மனிதனுக்கு கற்பித்தல் விந்தை!
உண்ணுதல், புணர்தல், உறங்குதல், பாதுகாத்தல்
விலங்கினமும் இதைத்தானே செய்கிறது!
வித்தியாசம் என்ன?
கேள்விகள் கேட்பதில்லை!
பதில்தேட விழைவதில்லை!
கல்விசாலைகள் கண்மூடி உறங்குகின்றன!
சுகமாக வாழத்தானே வாழ்க்கை!
நித்யசுகம் எதுவென்று ஏன் அறிவதில்லை!!!
துன்பம் விலக்க தூக்கம் தொலைத்தோம்
மெய்துன்பம் எதுவென்று அறியாமலே....
பிறப்பு இறப்பு மூப்பு நோய்
இவைதானே வாழ்வின் மெய்யான துன்பம்
இதை தொலைக்க வழி தேட மறந்து
எதை தொலைக்க நாம் தொலைந்து போகிறோம்!!!
விசவிருட்சதின் வேர்களை சாய்க்காமல்
கிழைகளை வெட்டுவதில் காலம் கரைகிறது!
சிறு பிள்ளை அழுகை நிறுத்த
ஒரு பொம்மை சற்றே இனிப்பு!!!
சிந்திக்க தெரிந்த மனிதா!
சிறு பிள்ளையா நீ?
புலனின்பமும் சிற்றின்பமும் போதுமா?
நித்யானந்தம் வேண்டாமா?
கேள்விகள் கேட்க மறுக்கிறாய்....
அற்ப பதில்களில் அடங்கிபோகிறாய்....
தன்னை அறிந்த உண்மை அறிந்த
குருவிடம் கேள்!
போலிகளிடம் ஏமாறாதே!
பிரபுபாதரின் புத்தகங்களை படி!
நுட்பமாக படி! கூர்ந்து படி!
கேள்விகளை கேள்!
புரியாததை புரிந்து கொள்ள கேள்!

எழுதியவர் : Namavatara Krishna Das (18-Aug-13, 12:55 am)
பார்வை : 55

மேலே