பூமியெங்கும் பூவாசம்......!!

விசைப் பலகையில் இசைத் தமிழை
தட்டச்சு நான் செய்கையிலே

விரும்பி வந்து பட்டாம் பூச்சி
விரல் நுனியில் அமர்ந்தது.....

விரட்ட எனக்கு மனமின்றி
வினவினேன் வருகை பற்றி.....

தேன் சுவை உன் விரல் நுனியில்
தித்திக்கிறது நண்பனே என்றது....

தமிழ் தட்டச்சு செய்வதனால்
தான் வந்தது அச்சுவை என்றேன்....!

பறந்து சென்று பட்டாம் பூச்சி
பட்டென அமர்ந்தது தமிழ் பாடப் புத்தகத்தில்..!!

பார்த்திருந்த பூக்களும்
படிக்கத் தொடங்கியது தமிழ் மொழி......

எனவேதான் பூமியெங்கும் பூவாசம்......!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (18-Aug-13, 10:26 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 136

மேலே