வாழ்வே தமிழ் - நாகூர் கவி

நான் கருவாய் இருந்தபோது
என்னை அன்னையாய்
அரவணைத்தது தமிழ்...!
நான் மழழையாய் தவழ்ந்தபோது
என் பரிபாஷையை
மறறவர்களுக்கு இசையாய்
ரசிக்க வைத்தது தமிழ்..!
நான் கேள்வி குறியாய்
உடைந்து நின்றபோது
என்னை ஆச்சரியக்குறியாய்
மாற்றியது தமிழ்..!
என் எண்ணங்களை
எழுத்து இணையத்தில் சொன்னபோது
பல இதயங்களாய்
வந்தது தமிழ்..!
இன்று எனக்கு
அவள் கவியானாள்!
நான் அவளது
காதலனானேன்...!