உன்னுள்ளும் என்னுள்ளும் உணர்வாக!..

உலகையே வளைத்துப்பிடிக்க
அலைந்தவர்களின் மொழியுமில்லை!
உலகிலே தம்மதத்தை
பரப்பியவர்களின் மொழியுமில்லை!
உலகமக்களெல்லாம் சொந்தமாக
நேசம்கொண்ட பாசமொழி!
உலகஉயிர்களெல்லாம் தம்முயிராக
கருணைகொண்ட அன்புமொழி!

தமிழுக்கு நீ எதுவும்
செய்ய வேண்டாம்!
தமிழை நீ பழிக்காதே
அதுவே வாழும்!
தமிழை நீ மறவாதே
அதுவே போதும்!

வள்ளுவரின் வாக்கும்
கம்பனின் கவித்துவம்
உலகுக்கே தெரியும்!
அகத்தின் அழகும்
புறத்தின் வலிவும்
எல்லோர்கும் இனிக்கும்!

அன்று ஆண்டதனாலே
அவன்மொழி ஆண்டமொழி!
இன்றுமா அடிமை நீ?
அவன் மொழிக்கு!
தனித்தமிழ் நம்
தீந்தமிழ் உணர்வாயோ?

பிழைக்கின்ற இடந்தனிலே
பழகும்மொழி சிறப்புதான்!
இருக்கின்ற இடத்தினிலே
வழங்கும்மொழி உயர்வுதான்!
செல்லும் இடமதிலே
பேசும்மொழி நன்றுதான்!

உன் உணர்வில் கலந்த
மொழியன்றோ தமிழ்!
உன் உதிரத்தில் கரைந்த
மொழியன்றோ தமிழ்!
உன் உடம்போடு வளர்ந்த
மொழியன்றோ தமிழ்!

தமிழிலே உரைப்பது உரிமை!
தமிழுணர்வு பெறுவது முறைமை!
தமிழிபேசி பழகுவது இனிமை!
தமிழெழுதி வளர்வது அருமை!
தமிழோடு வாழ்வது பெருமை!
தமிழ்வாழ்த்த உயர்வது செழுமை!

எழுதியவர் : சீர்காழி.சேதுசபா (18-Aug-13, 11:49 am)
பார்வை : 310

மேலே