கடவுளே தமிழ் உருவாய்.......
துணைக்கு நிலவிருக்கும்
தொல்லை செய்யா மனசிருக்கும்
தூக்கத்தில் கனவு வந்தே
தூரிகை வீசி இருக்கும்.....!
காரணம் தமிழ் கவியில்
கற்பனை கலந்திருக்கும்.......
காலமெலாம் வாழ்ந்திருக்க
காலனும் தமிழ் ரசிப்பான்.....!
ஏனெனில்.........
கடவுளே தமிழ் உருவாய்
காலம் பிறக்கு முன் தோன்றி விட்டான்....!