தூரமாய் இருக்கிறது

நிலவை பார்ப்பதும்
உன்னை பார்ப்பதும்
தூரமாக இருக்கிறது ...!!!

நீ அசைத்தால்
அசைவதற்கு
நான் கொப்புஅல்ல
மரம் ........!!!

கப்பலில் போய் கரையை
அடையலாம் -நீயோ
கட்டுமரத்தில் தான்
போய் கரையை அடைவேன்
அடம்பிடிக்கிறாய் .....!!!


கஸல் 375

எழுதியவர் : கே இனியவன் (19-Aug-13, 3:38 pm)
பார்வை : 139

மேலே