அடுத்த முகுர்த்தமே கல்யாணம்

அங்க இங்க சீட்டு கட்டி
அரிசி நெல்லு நானும் குத்தி
என் ஆசை மகளுக்கு வரம் தேடி
நானும் கட்டிய வீடு இது
மாட்டு சாணி உருட்டி தட்டி
ஆட்டு பாலு கூவி விற்று
என் ஆசை மகள் கழுத்துக்கென
நானும் செய்த பொன் மாலை இது
கோடி ரூபா சொத்து சேர்த்து
கொடி பறக்க நாங்க வாழாட்டியும்
ஒரு வேளை கூழு குடிச்சி
மானம் காக்கும் குடும்பம் இது
அன்பு பாசம் ஊட்டி நானும்
குடும்ப மானம் காக்க
சொல்லி கொடுத்து வளர்த்த மகள
வரம் கேட்டு நீங்க வந்திருக்கிறீங்க
இப்ப என்ன வேண்டுமென்று
நீங்க சொல்லுங்க சம்மந்தி
தட்டு மாற்ற முந்தி
உங்க தரப்ப கேட்டு சொல்லுங்க சம்மந்தி
பெரிசா ஒன்றும் தேவையில்ல
மாப்பிள போக காரு ஒன்றும்
இருபது பவுன் மாலை ஒன்றும்
தந்தா போதும் சம்மந்தி
அடுத்த முகுர்த்தமே நாளை குறிப்போம்
உங்க ஆசை போலவே கல்யாணம் முடிப்போம்