எப்படியும் வாழனும்....

இந்தச் சுதிகளிலேயே
பாட வேண்டும்.....

இந்தத் தொனிகளிலேயே
பேச வேண்டும்...

இந்தப் பதங்களிலேயே
சமைக்க வேண்டும்....

இந்த நெருக்கங்களிலேயே
பழக வேண்டும்....

அளவுகள் மீறினால்
தோற்றுப் போவாயென
மிரட்டி
காசு பறிக்கிறது
உலகம்....

எப்படியும் வாழ்ந்துவிட
வேண்டுமென்று...!

எழுதியவர் : சரவணா (22-Aug-13, 8:27 am)
Tanglish : eppatiyum vaazhanum
பார்வை : 78

மேலே