கடைக்குட்டி பாசமலரா ?

எல்லா பெற்றோர்களுக்கும் அத்தனை
பிள்ளைகளும் சரிநிகர் சமானம்தான்

இதில் முதலில் பிறந்தது – இன்னும்
கடைசியில் வந்தது என்பதல்ல

சில நேரங்களில் பாசம் இருக்கும்
பல நேரங்களில் வேஷம் போடும்

நூற்றில் பத்து பாசம் உண்மையாக
மீதி தொண்ணூறும் வேசமாக

உண்மையாக இருக்க வேண்டும்
நாம் பெற்றவர்களிடம் என்றும்

அவர்களை ஏமாற்றுவதும் நாமாக
சில நேரங்களில் இருக்கிறோம்

பணம் உள்ளவன் பழியை மறைக்க
பணம் இல்லாதவன் வலியை சுமக்க

வீட்டுக்கு வீடு இந்த அவலத்தை
நாம் கண்கூடாக காண முடிகிறது

பொறுக்க முடியாத நம் மனது தான்
பாசத்தை பிரித்து பார்க்கிறது மதியிழந்து

கூடுதலாக சில பிள்ளைகளிடம் பாசம்
எல்லா குடும்பத்திலும் இயற்க்கை இது

பொறுமை இல்லாத நாம் பிதற்றுகிறோம்
உரிமை எல்லோருக்கும் உண்டு சமமாக


பாசம் ! இது அடி மனதில் அன்போடு

வேஷம் ! இது கண்டால் மட்டுமே சிரிப்பது


ஸ்ரீவை. காதர்.

எழுதியவர் : -ஸ்ரீவை.காதர்- (22-Aug-13, 8:22 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 70

மேலே