யாருக்கு புரிகிறது இந்த கீதங்கள்

கண்கள் காணும் கனவுகள் கண் யிமைகள் பார்ப்பதில்லை,
ஆனாலும் ஒளிபிம்பங்கள் உள்ளத்தில்...,
அர்த்தம் உள்ள பேச்சுக்கள் இருந்தாலும் அச்சம் இருந்தால்,
மூச்சுக்காற்று கூட வீசாது...,
யார் அங்கே யார் அங்கே தேடும் உள்ளத்தில்,
நீ எங்கே தேட மறப்பது ஏனோ...,
எவர் எவர் என்ன சொன்னாலும்,
அவர் அவர் உருவங்கள் அருக்கு மட்டும்தான் வெளிச்சம்...,
ஆசைகள் கைகளில் இருந்தாலும்,
கால்தடங்கள் சொல்வதில்லை...,
மௌனங்கள் எல்லாம் நடைபோனால்,
பொய்யான உருவங்கள்தான் கண்ணுக்கு...,
பெண்மை முன் ஆண்மை பேசும்,
ஆனால் உண்மை சுமந்தது யாரோ...,
காலங்கள் மாறினாலும்,
உண்மைகள் என்றும் மாறிடாது...,
உண்மையை சொல்ல விரும்பினாலும்,
உலகம் விரும்புவது பொய்யான காட்சிகளைத்தான்...,
உணர்வுகள் கண்ணில் பிறந்தாலும்,
கடமைகள் என்னும் கண்ணீரில் முழ்குவது இயல்போ...,
ஊருக்கு சாட்சி சொல்ல ஒருவரை கூப்பிட்டால்,
உண்மைக்கு சாட்சி சொல்ல எவரை கூப்பிடுவது...,
ஏமாற்றுவர்கள் இன்று புத்திசாலி ஆனால்,
ஏமாற்றுபடுவர்களும் ஏமாற்றினால் நாளைய முட்டாள்கள் யார் யார்....??