கனவு கண்ட ஊமையாய் விழிகளில் கண்ணீருடன் நான் 555

என்னவளே...

பூத்து குலுங்கும்
பூக்களை தொடும் வேலை...

பனித்துளி விழுமுன்னே
கைகளில் ஏந்த ஆசை
மழலையை போலவே...

உன்னிடம் காதலை
சொல்ல நினைத்து...

சொல்லாமலே...

உன்னை நினைக்கும்
போதெல்லாம்...

ஓடி எழுதினேன்
காதல் கடிதங்கள்...

கொடுக்க நினைத்தும்
கொடுகாமலே வைத்திருக்கிறேன்...

கொடுத்தால் என்னை
வெறுதுவிடுவாயோ...

பயத்துடனே உன்னிடம்
கொடுக்காமலே...

நான் வைத்திருக்கும்
கடிதங்கள் ஏராளம்...

நான் கொடுத்திருந்தால்
என் பாசத்தை இன்னும்...

அதிகமாக
சொல்லிருக்குமோ...

நீ மணமாலை சூடி
கொண்ட பின்னும்...

உன் பிறந்த நாட்களில்
புதியதாய் வாங்குகிறேன்...

வாழ்த்து
அட்டைகள்...

உன் திருமண நாளில்
வாங்குகிறேன்...

உனக்கும்
உன் கணவருக்கும்
வாழ்த்து அட்டைகள்...

உனக்கு அனுப்பாமலே
என்னிடம் இருக்கிறது...

அனுப்ப
தெரியவில்லையடி...

என்னவென்று
அனுப்புவேன் நான்...

உனக்கு
உறவை சொல்லி...

கனவு கண்ட
ஊமையாய் நான்...

விழிகளில்
கண்ணீருடன்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (22-Aug-13, 2:33 pm)
பார்வை : 155

மேலே