உயில் செய்யும் மாயம்..!

உயில் செய்யும் மாயம்..!
உரியவரின் உயிர்போனால் எழுந்து வரும்
எழுந்துவந்து உறவுகளை உசுப்பிவிடும்
உசுப்பிவிட்டு உறக்கத்தை கலைத்துவிடும்
கலைத்துவிட்டு கைகலப்பில் சேர்த்துவிடும்
சேர்த்துவிட்டு நீதிமன்றம் இழுத்துவிடும்
இழுத்துவிட்டு வழக்காடி தீர்த்துவிடும்
தீர்த்துவிட்டு தீர்ப்போடு திரும்பி பார்த்தால்..
உயிலோடு உள்ளதும் போச்சு...
நாராயணா..நாராயணா....!
குமரி