அவ்வபோது நினைவு கொள்...
நிலவிழந்த வானமாய்...
ஒளிழந்த சூரியனாய்...
மலரிழந்த தோட்டமாய்...
நீரிழந்த குளமாய்...
தாயிழந்த சேயாய்...
நிழலிழந்த உருவமாய்...
துடிப்பிழந்த இருதயமாய்...
வார்த்தையிழந்த கவிதையாய்...
உன்னை இழந்து நான்...
என்னை இழந்து நான்...
நம்மை இழந்து நான்...
வெற்றிடமாய் என் விரல் இடுக்குகள்...
ஒற்றை துடிப்பாய் என் இதயம்...
உன் பார்வை படாமல்
நான் மலராமலே பொய் விடுவேனோ...?
உன்னால் நான் மலர்ந்ததை விட
உன் தென்றல் பார்வையில்
நான் உதிர்ந்ததே அதிகம்...
வறண்ட பூமியாய் நான் இங்கு...
உன் நினைவுகளை சேகரித்து
என் இதய தாகம் தீர்த்து கொள்கிறேன்...
உயிரோடு கலந்த நினைவே
மறந்துவிட்டாலும்
அவ்வபோது நினைவு கொள்..
உன் இதயத்தில் சிறு பகுதி
உன்னிடம் இல்லை என்பதை...