அளந்துப் பார்க்கும் காலமிது

ஓயாமல் உழைத்திட்ட உள்ளமது
ஓய்வாய் இருக்கும் காலமிது !
ஓடாய் தேய்ந்திட்ட மேனிஇது
ஒடுங்கிட்ட நேரத்தின் படமிது !

அந்தக் கால நினைவுகளை
அசைபோடும் தோற்றமிது !
அயராமல் உழைத்ததை
அலசி ஆயும் காட்சியிது !

முதுமை கால வாழ்வின்
முழுமை தோற்றம் இது !
முடியாத வாழ்வை எண்ணி
முனகிடும் நேரம் இது !

அளவிலாமல் ஓடியாடியதை
அளந்துப் பார்க்கும் காலமிது !
ஆரவாரமாய் ஆடிப்பாடியதை
அமைதியாய் நினைக்கும் காலமிது !

வாழ்ந்திட்டக் காலத்தை இன்று
வாழ்வதை ஒப்பிட்டுப் பார்ப்பது !
வாழப்போகும் நாளை நினைத்து
வாழும் நாளை எண்ணி ஏங்குவது !

காலம் முழுதும் கடந்திட்டு
களைப்பு வந்திட்ட காலமிது !
காலன் வரும் திசை தேடி
காலம் கழித்திடும் நேரமிது !




பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (24-Aug-13, 8:40 am)
பார்வை : 79

மேலே