குட்டி பாப்பாக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

அழகு கிளியே
மழலை மயிலே
முக மதியே
புன்னகை பூவே
குரல் குயிலே
பேச்சு கவியே
குறும்பு கீதமே
அன்பு சிகரமே
அறிவு புதையலே
கல்வி களஞ்சியமே
அன்னையின் பொக்கிஷமே
தந்தையின் தங்கமே
பட்டாம்பூச்சியாக பறந்து
பார்ப்போரை எல்லாம் கொள்ளைகொள்ளும்
தேவதையே !!!!
இன்று பிறந்தநாள் காணும்
ஷிவானி சிறுவண்டே
வெற்றி வாகை பல சூடி
பாரெங்கிலும் உன் புகழ் பரவட்டும் :)
உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!!!
Wish you happy birthday shivani papa.!!!

எழுதியவர் : தவமணி (24-Aug-13, 8:32 pm)
பார்வை : 21050

சிறந்த கவிதைகள்

மேலே