கடவுள் தேடுவதை நிறுத்திக்கொண்டேன்
பரம் பொருள் பரம் பொருள் என்று
பசி எடுக்கும் வரை கேவி கொண்டிருந்தேன்
பரிந்து கொடு பொருள் பரிந்து கொடு பொருள் என்று
பணியில் இருந்து கொண்டு கேட்கின்றேன்
கர்மயோகத்தின் கடவுள் கருணை காட்டுகின்றார்
கடைசி தேதிக்கு பின் முதல் தேதியில் சம்பளத்தோடு
வணங்கிய என் கை அப்போதே வயிற்றை தடவி வாழ்கையின் அர்த்தத்தை தெரிந்து கொண்டபோது
என்னுடைய கடவுள் எல்லோருக்கும் காட்சியளிப்பார்
இப்போதே கைகூப்புங்கள் கர்மத்தில்
என்று மட்டும் என்னால் கூற முடியும்