என் மரணத்திற்கு காரணம் மார்கழி பனி

ஏய்..!..
மார்கழி பனியே
உன் வருகை சற்றே
வாட்டி வதைக்கிறது என்னை....

நேற்று வரை நலம்தான் நான்
இன்று என் மூக்கோடு
போராடுகிறேன்
இதுவரை 3 கைக்குட்டை
நனைந்து விட்டது....

என் குரல் மாறிவிட்டது
என் தேகம் நடுங்குகிறது
போர்வைக்குள்ளே பலமணி
நேரம் வீணாய் போகிறது உன்னால்....

கோவை குளிர்
காலை தென்றலை ரசிக்கமுடியவில்லை
மாலை நேர மஞ்சள் வெயில்
உணரமுடியவில்லை உன்னால்....

பச்சை தண்ணீரை
என் விரோதி ஆக்கிவிட்டாய்
இனி எப்படி நண்பனாக்குவேன்
அவனை வெயில் காலத்தில்.....

இரவோடு போராடி
இனியும் விடியாத என புலம்பி
குளிரில் தூக்கத்தை துளைக்கிறேன்....

நலமாக இருந்திருந்தால்
உன்னை வரவேற்று
என் தோட்டத்து மலர்களில்
உறங்க வைத்திருப்பேன்
நீயோ வந்திரங்கிவிட்டாய்
என் தலைக்குள் பாரமாக....

உந்தன் பனி வேஷம்
எனக்கு சலதோஷம்
என்னால் முடியவில்லை
மரியாதையாக போய்விடு
இல்லைஎன்றால் மரண ஓலை
எழுதி வைப்பேன்
என் மரணத்திற்கு காரணம்
மார்கழி பனி என்று.....

எழுதியவர் : பாலமுதன் ஆ (27-Dec-10, 8:11 pm)
பார்வை : 502

மேலே