கவிதையை தேட வேண்டாம்!(தாரகை)
பூங்காவில் நடைப்பயிற்சி
தின்பண்ட விற்பனை வளர்ச்சி
இளைத்தது இயற்கை!
அன்னம் பால் விற்றாள்
தண்ணீரோடு பாதி
பால் கலந்து!
விவாகரத்து வழக்கு நிலுவையில்
தீர்ப்பு வந்தது
இயற்கையிடமிருந்து!
தாய் சொல்லைத் தட்டாத மகன்
திருமணத்தின் பொழுது
வரதட்சணை விசயத்தில் மட்டும்!
திருடு போனது
தாஜ்மஹாலின் விலையுயர்ந்த கற்கள்
சிறையில்,,,ஷாஜஹான்!