சுயமரியாதை திருமணத்தின் மூலம் கிடைத்த மனைவி என்ற உறவு

அவள்
வாசமாய் நான் !
என் சுவாசமாய்
அவள் !


பரிணாம வளர்ச்சியில்
இது ஒரு அதிசயம் !
உன் பெயரை
மட்டுமே
உச்சரிக்கும்
காதல்
பச்சைக் கிளியாய்
உருமாறியிருக்கின்றன
எனது
செல்களும்
எண்ணங்களும் ...


நூறு ஆண்டுகள்
வாழ வேண்டும்
உன்னோடு !
பேசாமல்
கடவுளாய்
பிறந்திருக்கலாம்
நாம் !


பார்வையின்
மோதலால்
பரிசுத்தமாயின
எங்களது விழிகள் ! ..


சிந்தையில் பிறந்து
செவ்விதழில் பிறப்பதெல்லாம்
கவிதையென்றால் என்னவளே
நீ பேசுவதெல்லாம்
கவிதை !

நீ
இல்லாத நேரங்களில்
சஹாரா பாலைவனத்தில்
நடுவில்
நான் !

உன்னோடு
இருக்க போகும்
நாட்களெல்லாம்
எனக்கு
விழாக்காலங்கள் !

என்னவள்
ஸ்தீரீகளுக்குள்ளே
ஆசிர்வதிக்கப்பட்டவள் !

தொலைந்து போன
ஆட்டுக்குட்டி நான்!
எனை மீட்க வந்த
மீட்பர் நீ !

தெய்வத்தின்
தூதுவர்கள் தான்
தேவதைகள்
நீ
தேவதை அல்ல
என்
தெய்வம் !

எழுதியவர் : வெ.நா சுபாஷ் (25-Aug-13, 11:11 am)
சேர்த்தது : mughilan
பார்வை : 114

மேலே