வெண்டைக்காய் .....!!

வெண்முத்துக்களை
உன் பெட்டகத்துள்
மறைத்து வைத்துள்ள
பதுக்கல்காரி நீ ....!!
அறிவைப் பெருக்குவதால் - உன்
தலையில் கிரீடமோ ...? -இன்றேல்
அழகிப் போட்டியில் வென்றனையோ ....?
பெண்ணின் விரலென
நாமகரணம்
அந்நிய மொழியில்
சூட்டியதால் ....
அகந்தையோ ....?
உன் இனத்தாரெல்லாம்
மண்பார்த்து தலை குனிய ...
நீ மட்டும்
விண் நோக்கி
நிமிர்ந்து நிற்கிறாய் ....?
வணங்காமுடி ஆனதாலோ
வாங்கும்போது ...
முனை உடைத்து
பார்க்கின்றனரோ.....???