40வது ஆண்டு நிறைவு விழா வாழ்த்துப்பா!

தென்தமிழ் நாட்டாராம்
தென்பாண்டி வீட்டாராம்
பதிசெந்தூர் சோதரராம்
பத்திரகாளி புத்திரராம்
தூத்துக்குடி குளத்தூராம்
துலங்கு குலம் நாடாராம்
சென்னை நகர் தலைவராம்
தாமஸ் நாடார் வாழ்வீரே!

சென்னை வாழ் நாடார் குல
சேர்ந்த சபை துணைத்தலைவர்
அன்னை அவள் பத்திராகாளி
அருளாலே உயர்வுற்றீர்.
சென்னையிலே செங்குன்றம்
சீரின் திரு மணமண்டபம்
நின்று புகழ் சொல்லுமே!
என்றும் பேர் வாழ்வீரே!

உலகெலாம் பரந்து வாழும்
உறவின் முறைச் சொந்தங்கள்
திலகமாம் தமிழகத்தின்
தலைநகராம் சென்னை சங்கம்
நாலுபத்து ஆண்டாவது
நன்னாளைக் கொண்டாடும்
பொன்னாளாம் இன்னாளாம்
போற்றினோம் வாழ்கவே!

காமராசர் சவுந்தரனார்
கர்மவீரப் பரம்பரையாம்
தேமதுரத் தமிழ் மணக்க
தேசமெலாம் பரந்தாள்வீர்!.
அறப்பணிகள் ஆற்றி நாளும்
ஆக்கங்கள் செய்குவீர்.
திறமைகள் ஏற்றி மேலும
தேசப்பணி ஆற்றி வாழி!

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (25-Aug-13, 2:34 pm)
பார்வை : 240

மேலே