தென்றல்

தென்றல் ....
என் விழி காண இயலாதா
ஓர் அழகிய ஓவியம் !
என் நாவ் அறியாத
ஓர் சுவை !

இசை சுரங்களை
அழகாய் கோர்த்து
என் செவி சேர்க்கும் அலை !

அதிகாலை ,
அந்திமாலை
சிறகை விரித்து அழகாய் பறக்கும் ,
மலரை தொட்டு தழுவி
மனம் வீசும் .
அதை உணரும் போது
என் மனதில் அலை வீசும் !

அது ...
என்னை தொட்டு செல்லும் போது
என் தேகம் கரம் நீட்டும் ,
அள்ளி அணைக்க ஏங்கி கிடக்கும் !

கார் மேகம் மழை பொய்க்கும் போதும்
மழை துளியிடையில் ஊடுருவி செல்லும்
நீர் துவிகளை சுமந்து கொண்டு
ஈராக்கற்றாய் சிலிர்க்க வைக்கும் !
தென்றல்

எழுதியவர் : மதியழகன் ம (25-Aug-13, 2:39 pm)
சேர்த்தது : Mathi Mani
Tanglish : thendral
பார்வை : 157

மேலே