(23)தந்திர காட்டில் நான் (3) குகை நோக்கிய பயணம் -(கார்த்திக்)
.................. (3) குகை நோக்கிய பயணம் .................
============(தொடர்ச்சி )=============
திரும்பியதும் கண் கூசசெய்யும் வெளிச்சம்
திகிலடைந்த மனம் ஸ்தம்பித்து நின்றது
அடிகள் முன் எடுத்து வைக்க திணறிய கால்கள்
அசரிரீயால் மிரண்டு நடுங்கிய என்னுடல் !!!!!!
இப்படி வர்ணிக்கவே முடியாத அளவு
இப்படி வார்த்தைகளே குழம்பும் அளவு
..........ஒரு சூழல் என்னை சுற்றி கண்டேன்
..........பயத்தையும் மீறிய ஒரு ஆவல் என்னுள்
இருந்தது
.........நடுக்கத்தையும் மீறிய ஒரு நடை என்னுள்
உருவானது
.........அடுத்த நொடி என்னவென்று யுகித்திட முடியாத பயணத்தில் இருக்கும் பொழுது ?
..........முன் எடுத்து வைக்கும் அடிகள் மரணத்தை
முன் வைக்கலாம்
..........எனது ஆவல் ஏமாற்றத்தை உண்டு செய்யலாம்
..........இப்படி எது குறித்தும் நான் சிந்திக்காமல்
வைத்த அடிகளில்......என் முன்னால்
.........நான் தேடி வந்த குகை
..........நான் தேடாமல் தேடியது
உள்ளே செல்லும் ஆவலும் பயந்து பின்னே செல்லும் அதிர்ச்சியும் என்னிடம் இல்லை !!!!!
இதுதான் இந்த பயணம் எனக்கு கற்று தந்த
விடயமோ ????.......
அட முட்டாளே ,குகைக்குள் செல் உனது
பயணம் இனிதான் ஆரம்பமாகிறது என்றது
மீண்டும் ..........
கற்றவை அனைத்தும் உண்மை அல்ல
கண்டவை அனைத்தும் மாயை அல்ல
பின் ?
..........உள்ளே செல், இதுவரை கடந்ததிலிருந்து
கற்றுகொண்டவற்றை பிரித்து எடுப்பது
அவ்வளவு சுலபமா என்ன ????
..........கற்றுகொண்டவற்றை பிரித்து எடுத்தால்
ரசித்தவை உண்மையாகிடுமா என்ன ????
ஆகையால் உள்ளே செல் !!!!!
நிரந்தர காட்சியை காண உள்ளே செல்!!!!
நிலையாமையை கடக்க உள்ளே செல் !!!!
நிதர்சனத்தை தரிசிக்க உள்ளே செல் !!!!
நிம்மதியை ருசித்திட உள்ளே செல் !!!!
உள்ளே செல் ,உள்ளே செல் ,உள்ளே செல்
புரிந்ததா அன்பே !!!!!!
வாழ்த்துக்களுடன் அசரீரியும் சென்றது
நானும் உள்ளே செல்ல குகைக்குள்
சென்றேன் !!!!!!!
==========குகைநோக்கிய பயணம் முற்றிற்று =========================
...........அடுத்த பாகமாக (24)தந்திர காட்டில் நான் (4)உள்முக தரிசனம்..............
சிந்திப்போம் சிந்திக்காமல் இருக்க சிந்திப்போம் மீண்டும் சந்திப்போம்
என்றென்றும் அன்புடன்
கார்த்திக்