இதுதான் காலத்தின் கோலமா

பாரிமுனையின் ​வீதிகளில்
பார்வையில் பலர்
அணிந்திட ஆடையின்றி !
அழைத்து கேட்டால்
அவர்கள் செப்பினர்
நங்கள் முல்லைக்குத்
தேர் ஈந்த பாரி மன்னனின்
வழி வந்த விழதுகள் என !
விசித்திரம்தான் !

பள்ளிக்கு வெளியே
சுற்றித் திரியும் ஒரு
மாணவனை கேட்டேன் ,
ஏன் உள்ளே செல்லவில்லையென ,
அவனும் சொன்னான் உடனே
தமிழ் வகுப்பு அதனால்
புறக்கணித்தேன் என்று .
நீ யாரெனக் கேட்டேன்,
அவனும் சொன்னான்
நாங்கள் கவிசக்கரவர்த்தி
கம்பனின் வழி வந்தோர்
தெரியுமா உங்களுக்கு என்றான்
வியப்பும் வேதனையும் எனக்கு !

இதுதான் காலத்தின் கோலமா ?

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (25-Aug-13, 2:32 pm)
பார்வை : 426

மேலே