பொன் மோகம் ....???
என்று....
அடங்கும் இந்த
பொன் மோகம் ...?
இறந்த உடலில் கூட
கழற்றி எடுக்கும்
பொன் மோகம் ....!!!
பாடையிலே
துயில் கொள்ளும்
பட்ட உடல் போட்டிருக்கும்
பட்டுப்புடவை பல ஆயிரம்
ரூபாக்கள் ...!!!
துயில் கொள்ளும்
பட்ட உடல் தூங்கும்
பெட்டி பல ஆயிரம்
ரூபாக்கள் ....!!!
பட்ட உடலில்
காதிலொரு தங்க கம்மல்
பட்ட உடல் வேக முன்
பறித்தெடுக்கப்படுகிறது
என்று மறையும் இந்த
பொன் மோகம் ....???
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
