தமிழா நாளைய விதையே!

மூவேந்தர் அரசாண்ட முத்தமிழ் நாட்டில்
முண்டாசு புலவன் போதித்த பாட்டில்
மங்காத வீண்மீனாய் குன்றாத வீரம்
தீங்கிழைத்தால் பூவும் போர்வாள் ஏந்தும்

தமிழன் புகழ்பாட எத்திசையும் காத்திருக்கும்
தச்சயோலை அத்தனையும் சாட்சியாய் நிற்கும்
தன்மானம் உயிராய் மனிதம் உடலாய்
மனித எடுத்துக்காட்டுக்கு தலை நின்றோம்.

கீர்த்தியுரைத்த நெஞ்சம் குமுறுது - நிகழ்
காலம் நினைக்கயிலே உதடுகள் உப்புக்கரிக்குது
மாற்றத்தில் மாய்த்து அடையாளத்தை இழக்கிறோம்
நாகரீக வளர்ச்சியில் தடம் புரள்கிறோம்.

மடமை மூடி மதி இழக்காதே
உடமை வேண்டி உழைப்பை திருடாதே
முல்லைகொடியின் மனதையே காயப்படுத்தா மண்
தொல்லை பெருக்கி மயான காட்சிவேண்டா?

நாடும் வீடும் ஒன்றாய் இசைப்பதை
உதடுகள் உணர்ந்தும் உள்ளம் ஒதுக்கவேண்டா?
கடுகாய் வாழ்ந்திட காடு போதும் - தோழா
எடு தமிழை பாடு தமிழ்நெறியை

தமிழா கேளாய் நாளைய விதையே!
தலைமுறை இடைவெளியில் தமிழனை தொலைத்திடாதே!
வாரலாற்றில் மட்டும் வாழும் நிலைவேண்டாதே!
விடியலில் மறைந்திடும் பனி நாமில்லை
விண்ணும் மண்ணும் போற்றும் மானுடம் நாம்.

நிமிர்ந்து நில்! நல்லவை துணிந்து செய்!!

தோழர்களே! என் கவியில் குற்றும் இருப்பின் மன்னிக்கவும்..

-செஞ்சிக்கோட்டை மா.மணி

எழுதியவர் : -செஞ்சிக்கோட்டை மா.மணி (26-Aug-13, 7:15 pm)
பார்வை : 136

மேலே