கற்றுக்கொண்டேன்
கடல் அலையே!
உன்னிடம் கற்றுக்கொண்டேன்
கரையின் அரிப்பை அல்ல
உன் விடாமுயற்சியை !!!!!
நிலவே!
உன்னிடம் கற்றுக்கொண்டேன்
குளிர்ச்சியை அல்ல
உன் கடமையின் கண்ணியத்தை !!!!
நதியே !
உன்னிடம் கற்றுக்கொண்டேன்
ஓட்டத்தை அல்ல
உன் இலக்கை நோக்கிய பயணத்தை!!!!!
காற்றே!
உன்னிடம் கற்றுக்கொண்டேன்
சுவாசத்தை அல்ல
புயலுக்கு பின் அமைதியை !!!!!
என்றும் அன்புடன்
உமா நிலா