உனக்காக..!

என் மீது கொண்ட மோகத்தால் அனுதினமும் என்னை அணைத்துக்கொண்டு முத்தமிட துடிக்கும் அன்பே..!
என்னால் கிடைக்கும் சொற்ப நேர சுகத்திற்காக..
இறைவன் கொடுத்த சொர்க்கமான வாழ்வை இழந்துவிடாதே..
என்னை மறந்துவிடு முழுமனதோடு..
நான் ஒன்றும் உன் நண்பன் அல்லவே..
உன் ஒற்றை உயிரையும் வாங்கும் ப(பு)கைவன் மட்டுமே..!
இப்படிக்கு,
சிகரட்...

எழுதியவர் : கணேஷ் இராவணன் (26-Aug-13, 8:06 pm)
பார்வை : 64

மேலே