“ஓம்” சொல்லுவோம்..! வாருங்கள்..!

மண் வலிமைக்கு மரத்தை நடு’வோம்’
மன வலிமைக்கு கூட்டாக வாழ்’வோம்’
இருப்பதில் சிறிது ஏழைக்கு அளிப்’போம்’
இல்லாமை நீக்கி ஏழ்மையை ஒழிப்’போம்’
கல்லாமையை நீக்கி அறிவை வளர்ப்’போம்’
கயவனை கண்டால் கல்லால் அடிப்’போம்’
தீண்டாமை பேயை தீவைத்து அழிப்’போம்’
உறவோடு வாழ்ந்து உள்ளத்தில் மகிழ்’வோம்’
நன்மைகள் நாடி நண்பனாய் இணை’வோம்’
நல்லவை அறிந்து தீயவை கழிப்’போம்’
வளமான வாழ்வில் வறுமையை துடைப்’போம்’
வானளவு உயர வலிமையாய் இருப்’போம்’
வேற்றுமை களைந்து ஒற்றுமை காண்’போம்’
வேசங்கள் துறந்து மனிதனாய் மாறு’வோம்’
தமிழ் அன்னை வளர தமிழில் பேசு’வோம்’
தரமான காவியம் தமிழில் படைப்’போம்’
சண்டைக்கு வரும் சாதியை துறப்'போம்'

வீழ்ந்தாலும் விடாமல் கை கொடுப்'போம்'
வெற்றி தேடி தோல்விவர விரட்டு'வோம்'

மனிதனை கொல்லும் மதத்தை மறப்’போம்’
மகானாய் மாறி பகைவனை மன்னிப்’போம்’

இதுவும் "ஓம்" தானே..!
குமரி பையன்

எழுதியவர் : குமரி பையன் (28-Aug-13, 11:32 pm)
பார்வை : 63

மேலே