+நீயே சொல்லு! நான் என்ன செய்ய?+
உன்னில் விழுகவந்தேன்!
உன் இதயத்திற்குள் மாட்டிக்கொண்டேன்!
என்னை வெறுக்கும் உன்னிதயம்
இருண்ட அறையாய் இருக்கக்கண்டேன்!
கண்ணிருந்தாலும் முட்டிமுட்டி
ஒரு அறைக்குள்ளே விழும் வண்டைப்போல
உன் இதய அறைக்குள்
இங்கும் அங்கும்
மீண்டும் மீண்டும்
இடித்து இடித்து
உள்ளுக்குள்ளேயே விழுந்துகிடந்தேன்!
வெளியே வர பிடிக்காமல்
நீயே சொல்லு! நான் என்ன செய்ய?