சுவர்க்கமும் நரகிலே
கண்ணீர் சிந்தி
நானும் இங்கே இங்கே
உன் கல்லறை கண்டு
நானும் வாழ்வேனா தாயே
சோகம்தான் தினம் நெஞ்சிலே
கண்ணீர்தான் என் கண்ணிலே
தாயும் நீயும் என் கண் முன்னே
மீண்டும் வருவாயா ...?
தாயே உன் தாய்மடியை
மீண்டும் நானும் கேட்கிறேன்
உன் கல்லறை வந்து நானும்
தினம் அதன்மேல் சாய்கிறேன்
உன் அன்பைத்தான்
மீண்டும் நானும் கேட்கிறேன்
ஆயிரம் உறவுகள் இருந்தும்
வெறுமையாய் நானும் காண்கிறேன்
சந்தோசம் ஒன்றும்
இங்கில்லை தாயே
நீ இல்லா உலகிலே
சுவர்க்கமும் நரகிலே தாயே