மனிதர்களாகிய நாம்
மலர்களைப் பார்த்து வியக்கிறோம்
பறவைகளைக் கண்டு உவகை கொள்கிறோம்.
பல மிருகங்களைப் பார்த்து மிரள்கிறோம்
சில மிருகங்களை நேசிக்கிறோம்.
மனிதர்களாகிய நம்மை அறிந்து
யாவும் மகிழவில்லை.
எவையும் நினைக்கவேயில்லை
நம்மிடம் பாராட்ட ஒன்றுமில்லை
என்று எண்ணுகின்றனவோ