+கவிதை செய்யுங்கள்! காத்திருக்கிறோம்!+
சில தருணங்கள்!
சில நிகழ்வுகள்!
சில சந்திப்புகள்!
சில காட்சிகள்!
சில கோபங்கள்!
சில சிரிப்புகள்!
சில மோதல்கள்!
சில காதல்கள்!
சில உதவிகள்!
சில ஓய்வுகள்!
சில கவிதைகள்!
சில மழைத்துளிகள்!
நம்மை கடக்கும் போதெல்லாம்
இது கவிதை பிறக்க நடந்த நிகழ்வோ
என எண்ணத் தோன்றுகிறது!
ஏனென்றால்
அதுவரை
அன்றுவரை
யோசிக்காத ஒன்று
கவிதைக்குள் வந்து
உட்கார்ந்து கொள்ளும்
சொந்தம் கொண்டாடியபடி
நம்மால் ஒன்றும் செய்யமுடியாது!
அதை ஏற்றுக்கொள்வதைத் தவிர!
அழகான கவிதை கிடைக்கும் போது
நமக்கென்ன கவலை!
பேசாமல் எழுதிவிட வேண்டியது தானே!