எங்கள் ஜனநாயகம்
சின்னத் திருடனை
சிறையில் அடைக்க சட்டம் செய்து
பெரியத் திருடனை
நாற்காலியில் அமரவைத்து
பாதுகாப்பு வழங்கும் .
மக்களால் மக்களுக்காக
மக்களே ஆளும் ஆட்சி
என்று சொல்லிக் கொண்டு
மக்களினால்
மக்களுக்கான பொருளை சுரண்டி -தம்
மக்களுக்காக சேர்க்கும்
சிக்கல் எங்கள் ஜனநாயகம்.