நீரும், பேயும்

உள்ளுர்காரன் தண்ணீர்க்கு அஞ்சான்
வெளியூர்க்காரன் பேய்க்கு அஞ்சான்
- முதுமொழி

பொருள்:

உள்ளுர்காரனுக்கு, அவனது ஊரில் உள்ள நீர் நிலை, குளம், குட்டை, ஏரி, கண்மாய் ஆகிவற்றின் ஆழமும், வழுக்கும் தன்மையும் நன்றாகத் தெரியும். அதனால் "உள்ளுர்காரன் தண்ணீர்க்கு அஞ்சான்"
ஆனால், வெளியூர்க்காரனுக்கோ அது தெரியாது என்பதால் அவன் வெளியூர் நீர் நிலைகளில் இறங்கும்பொழுது அஞ்சி, அஞ்சித்தான் இறங்குவான்.

மேலும்

உள்ளுர்க்காரனுக்கு, அவனது ஊரில் யார் யார், எந்தெந்த வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்கள் என்ற விவரம் தெரியுமாதலால், பேய்க்கு அஞ்சி நேரம்கெட்ட நேரத்தில் அவ்வீடுகளின் பக்கம் செல்லமாட்டான்.
ஆனால், வெளியூர்காரனுக்கோ இது தெரியாததால், வெளியூரில், அவன் எந்நேரத்திலும் பேய்க்கு அஞ்சாமல் எந்த இடத்திற்கும் கவலையின்றி சென்று வருவான்.

எழுதியவர் : காரைக்குடி ச சரவணன். (29-Aug-13, 9:30 am)
பார்வை : 56

மேலே