காத்திருக்கிறேன்.....இன்னமும்!
காத்திருக்கிறேன்....இன்னமும்...
எப்படிக் கரைந்தது கால்நூற்றாண்டு
இத்தனை வேகமாக....
சூரியச் சூட்டின் அடியில்
உருகி ஓடும் வெண்ணையின் உருவமாய்....
நாக்கின் விளிம்பு வரை வந்து
நவம்பர் குளிரில் நடுங்கும் நாயாய்
உன் கூரிய விழிமுன் கோழைத்தனமாய்
சொல்ல வந்து சொல்லாமல் போனவைகள்
இன்னும் அழியவில்லை.....
வாலஸ் கார்டன் கல்லறை சுவரில்
நான் பதித்து வைத்திருக்கும்
உந்தன் பெயரைப் போலவே!
இன்னும் எனது அடிமனது சொல்கிறது....
என்னிடம் சொல்வதற்கு
உன்னிடமும் ஏதோதோ இருக்கிறது....
அந்த உணர்வுகள்
கயறின்றி என்னை
கல்லறை சுவருக்கு இழுத்துச் செல்கிறது...
நான் வரைந்ததைப் போல
என் பெயரைப் பதித்திட
வாலஸ் கார்டனுக்கு
வருவாய் ஒருநாள் என்னும்
உலர்ந்து போகாத நம்பிக்கையில்.......
காத்திருக்கிறேன்.....இன்னமும்.....
தவம்......கவிமகன் காதர் .....