முதுமையில் இளமை

தள்ளாடும் வயதிலும்
தளர்ச்சி எதுவுமின்றி
தன் வேலையைத்
தானே பார்க்கும்
தயக்கமற்ற சுறுசுறுப்பு...!

தொலைதூரப் பயணமென்றாலும்
தன் கையே தனக்குதவியென்று
முதுமையின் அச்சமின்றி
துணையின்றிப் பயணிக்கும்
துணிந்த உள்ளம் .....!

எந்தநாட்டுக் குழந்தையாயிருந்தாலும்
குழந்தையின் புன்னகையில்
மெய்ம்மறந்து
தானும் குழந்தையாகி
குதூகலிக்கும் குழந்தைத்தனம்....!

கோடுகளாய் சுருக்கங்கள்
முதுமை ரேகைகளை
முகமதிலே வரைந்திட்டாலும்
முடியாதென்று ஒடுங்கிவிடாமல்
வாகனம் ஓட்டும் லாவண்யம்...!

உனக்கு நான் எனக்கு நீயென்று
முதுமையிலும்
இணைபிரியா தம்பதியாய்
கைகோர்த்தபடி வலம்வரும்
அன்பின் வழித்தடம் .........!

`நாங்கள் சுமைகளல்ல`
நடையின் கம்பீரத்தை
முதுமையின் இளமையை
வியந்து பார்த்தது
புலம்பெயர் நாடுகளில்....!!
---------------------------------------------------------------------
தோழி துர்க்கா

எழுதியவர் : தோழி துர்க்கா (29-Aug-13, 3:16 pm)
சேர்த்தது : தோழி துர்க்கா (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 1027

மேலே