நீயும் நானும்...
நீ கவிதை
நான் எழுதுகோல்...
நீ தண்ணீர்
நான் தாகம்...
நீ மழை
நான் மண்...
நீ காற்று
நான் சுவாசம்...
நீ பேச்சு
நான் சொல்...
நீ விழி
நான் பார்வை...
நீ சிரிப்பு
நான் ஒலி...
நீ கோபம்
நான் உணர்ச்சி...
நீ சோகம்
நான் இதயம்...
நீ காட்சி
நான் கற்பனை...
நீ காதல்
நான் கவி...
அன்புடன்
நாகூர் கவி.